Actress Vanisri Son Death
Actress Vanisri Son Death

வசந்த மாளிகை புகழ் வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலையடுத்து அவரின் இறப்பு குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

Actress Vanisri Son Death : தமிழ் சினிமாவில் வசந்த மாளிகை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிஸ்ரீ.

இவருடைய மகன் பெயர் அபிநய வெங்கடேஷ். இவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

தற்போது 35 வயதாகும் இவருக்கு திருமணமாகி குழந்தைகள், மனைவி ஆகியோர் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து வருகின்றனர்.

கிளப்பி விட்ட நெட்டிசன்கள்.. விஜய்யிடம் நலம் விசாரித்தாரா அஜித்? – வெளியான உண்மை.!

இந்த நிலையில் லாக் டவுன் காரணமாக குழந்தை மற்றும் மனைவியை காண முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அபிநய வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டதாக இன்று காலை தகவல்கள் பரவின.

ஆனால் உண்மையில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் சிறுவயதில் அபிநய வெங்கடேஷ் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.