Actress Vani Bhojan Interview Speech

ஒரு நடிகரை நம்பினால் வேலைக்கு ஆகாது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.

Actress Vani Bhojan Interview Speech : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள வாணிபோஜன் தற்போது கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமும் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கின்றனர்.

Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet

விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் பெரிய படம் கூட இதுதான். இப்படியான நிலையில் பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வாணி போஜன் ஒரு நடிகரை நம்பினால் வேலைக்காகாது. தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை நடிகர்களுடனும் இணைந்து நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.

வாணி போஜன் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீ ரொம்ப தெளிவா இருக்க மா என கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.