surveen chawla
சினிமா வாய்ப்பிற்காக சென்ற போது இயக்குனர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Surveen chawla faced casting couch – சினிமாத்துறையில் வாய்ப்பு கேட்டு செல்லும் நடிகைகள் பாலியல் தொலைக்கு ஆளாவதாக பல புகார்கள் எழுந்து வருகிறது. சமீப காலமாக சம்பந்தப்பட்ட நடிகைகளே இதுபற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். சின்மயி, ஸ்ரீரெட்டி போன்றவர்கள் இதுபற்றி அதிகம் பேசி வருகின்றனர்.

வசந்த் இயக்கத்தில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த் 2 ஆகிய திரைப்படங்களில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா.வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

surveen chawla

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் திரைப்படத்துறையில் தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். இயக்குனர் ஒருவர் என்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அறிய விரும்புகிறேன் எனக்கூறினார். தேசிய விருது பெற்ற ஒரு தமிழ் இயக்குர் ஒருவர் ஆடிஷன் போது மிகவும் தொல்லை கொடுத்தார். அவருடன் நான் படுக்கையை நான் பகிர வேண்டும் என விரும்பினார். அதனால் அப்பட வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன்.

என் படத்த தூக்கிடாதீங்க.. தியேட்டர் அதிபர்களுக்கு பார்த்திபன் கோரிக்கை

வாய்ப்புக்காக ஒரு இயக்குனரிடம் சென்ற போது உங்கள் மார்பை நான் பார்க்க வேண்டும் என ஒரு இயக்குனர் கேட்டார். வேறு ஒரு இயக்குனர் ‘உன் தொடையை காட்டு’ என்றார். இதுபோல் 5 முறை நான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகினேன் என அவர் கூறியுள்ளார்.