Actress Sneha Without Makeup Photos

தூங்கி எழுந்த முகத்துடன் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சினேகா.

Actress Sneha Without Makeup Photos : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின்னர் பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்து வருகின்றனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சினேகா படங்களிலும் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் தூங்கி எழுந்ததும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.