Actress Ruba Shree Dance Video

கானா பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ரூபா ஸ்ரீ.

Actress Ruba Shree Dance Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ரூபா ஸ்ரீ.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மாமியாராக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் தற்போது டிஆர்பியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தற்போது பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியலின் மெகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ரூபா ஸ்ரீ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளி மாங்கா புளி வளி மாங்கா வளி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.