Actress Oorvasi Daughter Photos

அழகில் அம்மாவையே மிஞ்சி உள்ளார் நடிகை ஊர்வசியின் மகள். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Oorvasi Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி. 1980-களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தீபாவளி விருந்தாக வெளியான சூரரைப்போற்று மற்றும் மூக்குத்தி அம்மன் என இரண்டு படத்திலும் நடித்திருந்தார். இவ்விரண்டு படத்திலும் ஊர்வசியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் உள்ளார்.

தன்னுடைய கணவர் மனோஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஊர்வசி அவரை 2008 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். அதன் பின்னர் 2013-ம் ஆண்டு தொழிலதிபர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவன் இருந்து வருகிறான்.

ஊர்வசியின் மகள் தன்னுடைய அப்பாவுடன் வசித்து வருகிறார். இப்படியான நிலையில் அவருடைய அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஊர்வசியின் மகள் அழகில் அம்மாவையே மிஞ்சி விட்டதாக கருத்து கூறி வருகின்றனர்.