நீலிமா ராணி வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ சமூக வளையதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நீலிமா ராணி. இவர் வில்லியாக நடித்து வரும் அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சூரிய தர்ஷன்.
இவருடன் சேர்ந்து நீலிமா ராணி வளைந்து நெளிந்து சூர்யாவின் அன்பே பேரன்பே பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க என்ன தான் நடிகையாக இருந்தாலும் இப்படியெல்லாம் திருமணத்திற்கு பிறகு டிக் டாக் செய்யாதீங்க ப்ளீஸ் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நீலிமா ராணிக்கு 20 வயதிலேயே திருமணம் நடந்து தற்போது ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.