Actress Mehreen Engagement Photos

முன்னாள் முதல்வர் பேரனுடன் தனுஷ் பட நாயகிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Actress Mehreen Engagement Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாசு உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து இருந்தவர் மெஹ்ரீன் பிர்ஸடா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.தற்போது இவருக்கு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.