நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் திருமணம் நடக்க இருப்பதாக நடிகர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
Actress Keerthy Suresh Marriage : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கீர்த்தியின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் தான் கீர்த்திக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இது குறித்து எந்தவித விளக்கமும் வரவில்லை.
இவர் தான் நடிகை சுனைனாவிற்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் அதே பேட்டியில் கூறியிருந்தார், அவர்களும் இது குறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த இரண்டு தகவல்களும் அந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் உறுதியாகவில்லை.