முன்பை விட இப்போ இன்னும் ஹாட்டா ஆயிட்டீங்க என கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Actress Keerthy Suresh Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் கொழு கொழுன்னு இருந்த கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் தன்னுடைய வேலையை முற்றிலுமாக குறைத்து ஒல்லியாக மாறினார். இதனால் இவருக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பும் கைவிட்டுப் போனது.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் நாய்க்குட்டி உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் முன்பை விட இப்ப நீங்க ஹாட்டா ஆகிட்டீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.