Actress Kasthuri in Suntv Serial

சின்னத்திரை சீரியலில் நடிகை கஸ்தூரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Kasthuri in Suntv Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கஸ்தூரி. 1990களில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்று பெரும் விமர்சனத்திறகு உள்ளாகி வெளியேறினார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து சமூக பிரச்சனைகள் அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். விரைவில் இவர் பிஜேபியில் இணைய இருப்பதாக கூட வதந்தி பரவியது.

இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்றான அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து உறுதியான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ரசிகர்கள் கஸ்தூரியை சின்னத்திரை சீரியலில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.