ஓட்டு போடாதது குறித்து நடிகை கஸ்தூரி வருத்தத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Actress Kasthuri About TN Election : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. 90-களில் நாயகியாக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான நபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை என சில தினங்களுக்கு முன்னர் வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார்.

இப்படியான நிலையில் கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓட்டு போடும் போது ஊர்ல இல்லையே என்பதை விட பண பட்டுவாடா நடக்கும் போது இல்லையே என்பது மிகுந்த வருத்தமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.மேலும் தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிம்பு, விஷால் ஆகியோர் ஏன் ஓட்டு போடவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.