Actress Jenifer Exclusive and Fun Shopping at Velevan Stores

YouTube video

Paava Kathaigal Success Celebration : தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா, வெற்றிமாறன் மணிரத்னம் மற்றும் விக்னேஷ் சிவன் என நான்கு இயக்குனர்களின் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் தான் பாவக்கதை.

இந்த படத்தில் இவர் இப்பகுதியில் ஒரு பகுதியை அதாவது தங்கம் என்ற பகுதியை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். சாந்தனு, காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Paava Kathaigal Success Celebration

அதிலும் குறிப்பாக திருநம்பி வேடத்தில் நடித்திருந்த காளிதாஸின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது. சாந்தனுவின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சாந்தனு மற்றும் காளிதாஸ் ஆகியோர் இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் சுதா கொங்கரா காலில் விழுந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காலில் விழுந்ததை கண்டு சுதா கொங்கரா அலறியடித்து ஓடியுள்ளார். இந்த வீடியோவை சாந்தனு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கம் பகுதியின் வெற்றி 19 வருட பசி என சாந்தனு உருக்கமாகப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.