Actress JayaChithra Husband Passes Away

பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு கணேஷ் அவர்கள் மரணம் அடைந்துள்ளார்.

Actress JayaChithra Husband Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயசித்ரா. பழம்பெரும் நடிகையான இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்தான் பிரபல இசை அமைப்பாளராக இருந்து வரும் அம்ரிஷ்.

ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் அவர்கள் திருச்சியில் உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.