Actress Harija Preganancy Photoshoot

நிறைமாத கர்ப்பிணியாக எருமை சாணி ஹரிஜா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Harija Preganancy Photoshoot : தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு இணையாக யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி வருபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

அப்படி யூ டியூப் வீடியோக்கள் மூலமாக பிரபலமானவர் தான் ஹரிஜா. இவர் சில படங்களில் கூட நடித்துள்ளார்.

அமர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஹரிஜா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு சீமந்தம் நடந்து முடிந்திருந்தது.

இப்படியான நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மாத கர்ப்பிணியாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் பலரையும் கவர்ந்திருக்கிறது.