hansika
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் புதிய படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்தி குறித்து நடிகை ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார்.

Actress Hansika denying acting with sarvanan arul – திடீரென விளம்பர படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆனவர் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள்.

தமன்னா, ஹன்சிகா என பலரும் அவரின் விளம்பர படங்களில் நடித்தனர். அதைத் தொடர்ந்து சரவணன் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வெளியானது, அதில் தமனா அல்லது ஹன்சிகா இருவரில் யாரோ ஒருவர் நடிக்கவிருக்கிறார் என்றும் செய்தி வெளியானது.

அதன்பின் நயன்தாராவுடன் சரவணன் நடிக்க இருப்பதாகவும் இதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு சரவணன் சினிமாவில் நடிப்பது உறுதி என்றும், தமிழ் முன்னணி நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடிக்க முன் வரததால் ஒரு புதுமுக நடிகையை நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

hansika

அதன்பின், அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக்வும் செய்திகள் வெளியானது.

அது ஒரு ஃபேன்டஸி படம் என்றும் பூமியில் வசிக்கும் மக்களை வேற்று கிரகத்திலிருந்து வந்து காப்பாற்றும் ரட்சகனாக சரவணன் அருள் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவலை ஹன்சிகா மறுத்துள்ளார். நாளில் வெளியான அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘உண்மையில்லை’ என அவர் பதிவிட்டுள்ளார்.