Actress Anushya Bharat waj covid-19 symptoms

நடிகை அனுஷ்யா பரத்வாஜ் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Actress Anushya Bharatwaj covid-19 symptoms : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுசியா பரத்வாஜ். இவரது நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான “ரங்கஸ்தலம்”படத்தில் நடித்ததற்காக விருது பெற்றார்.

சமீபத்தில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் இவர் சில்க் ஸ்மிதா வாக நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த செய்தியை அனுசியா மறுத்துவிட்டார்.

திரை உலகில் பெரும்பாலோனோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அனுசியாவும் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.