Actress Anushka Shocking Interview

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனுஷ்கா.

Actress Anushka Shocking Interview : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. அஜித் விஜய் ரஜினி சூர்யா விக்ரம் என பல நடிகர்களோடு இணைந்து இவர் நடித்துள்ளார்.

அருந்ததி உள்ளிட்ட படங்களில் சோலோ ஹீரோயினியாகவும் வெற்றி கண்டார். அதுமட்டுமல்லாமல் பாகுபலி 1, பாகுபலி 2 உள்ளிட்ட பிரமாண்ட படங்களிலும் அனுஷ்காவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த படங்களை தொடர்ந்து அனுஷ்கா சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என நான் சொல்ல மாட்டேன்.

ஆரம்ப கட்டத்தில் எனக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தன. ஆனால் நான் மறுப்பு தெரிவித்து விட்டதால் அதன் பிறகு என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

சினிமா மட்டுமில்லை எல்லா துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. சினிமா கவர்ச்சிகரமானது என்பதால் எளிதில் வெளியில் தெரிகிறது என பேசியுள்ளார்.

நடிகை அனுஷ்காவின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.