இளம் வயது தொழில் அதிபருடன் அனுஷ்காவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Anushka Marriage Details : தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தற்போது 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இவருக்கும் பிரபாஸ்க்கும் இடையே காதல் இருந்து வருவதாகவும் விரைவில் திருமணம் எனவும் தகவல்கள் பரவின. ஆனால் அது முற்றிலும் வதந்தி என இருவரும் விளக்கம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை மணக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொழிலதிபர் அனுஷ்காவை விட வயதில் இளையவர் எனவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தீயாக பரவிவரும் இந்த தகவல் குறித்து அனுஷ்கா இன்னும் எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்து வருகிறார்.