Actor Thavasi Photos

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் தவசி உடல் எடையிலிருந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Actot Thavasi Latest Photo : தமிழ் சினிமாவில் கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க ஆரம்பித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் வரை நடித்திருப்பவர் தவசி.

அதிலும் குறிப்பாக இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் எனப் பேசிய டயலாக் மிகவும் பிரபலமானது.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படும் வீடியோ ஒன்றை சக நாடக கலைஞர் ஒருவர் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வீடியோவில் பேசிய நடிகர் தவசி, எவ்வளவோ படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கருப்பன் கனவில் கூட நினைத்துப் பார்க்காத புற்றுநோயை எனக்கு கொடுத்து விட்டான்.

என்னுடன் நடித்த நடிகர்கள் ரசிகர்கள் என்னுடைய மருத்துவ செலவுக்காக உதவி செய்யுங்கள் என கை கூப்பி கண்ணீர் விட்டு கேட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.