Vivekh Intrest in Direction

கடைசி ஆசை நிறைவேறாமலேயே மறைந்து போயுள்ளார் நடிகர் விவேக்.

Actor Vivekh Intrest in Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விவேக். கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இவருக்கு நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் மறைந்த சோகம் வெளியே தெரிய வந்துள்ளது. அதாவது இது ஒரு படத்தை இயக்க இருந்துள்ளார். இந்த படத்தில் இந்துஜா தான் நடிக்க இருந்ததாக நேற்று அஞ்சலி செலுத்திய பிறகு அவர் கூறியுள்ளார். அதற்கான டிஸ்கஷன் இந்த வாரம் நடைபெற இருந்துள்ளது.

மேலும் இந்த படத்தினை தயாரிக்குமாறு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் இருந்து வந்துள்ளார் நடிகர் விவேக். அவரது திறமையான இயக்குனர் என்ற இன்னொரு முகத்தை காட்டாமல் மறைந்து விட்டார் என சத்யஜோதி பிலிம்ஸ் உரிமையாளர் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இப்படி இயக்குனராக வேண்டும் என்ற கடைசி ஆசை நிறைவேறாமலேயே நடிகர் விவேக் உயிரிழந்தது ரசிகர்களுக்கு இன்னும் வேகத்தை கூட்டியுள்ளது.