விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Actor Vivek Health Status : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் விவேக் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவேக் எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவருடைய இதயத்தில் இடது வால்வில் முழுமையாக அடைப்பு இருந்ததே பாதிப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள அவரின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து 24 மணி நேரம் கழித்து தான் கூறமுடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரானா தடுப்பூசி அவருடைய உடல்நிலை குறைபாட்டுக்கு காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.