கொரானா தடுப்பு ஊசி செலுத்தி நிலையில் நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Actor Vivek Admitted in Hospital : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.
இவர் நேற்று கொரானா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.