Actor Vijay Sethupathi Mid Night Bike Ride

YouTube video

VJ Chithra in Sun Tv Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் சித்ரா.

சாதாரண தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கிய இவர் பல்வேறு சேனல்களில் பணியாற்றி தற்போதுதான் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஹோட்டல் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சித்ரா இல்லாத பாண்டியன் ஸ்டோர் சீரியலிலை பலரும் பார்க்க விரும்புவது இல்லை.

அந்த அளவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு முன்பாகவே இவர் சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்துள்ளார்.

ஆம் 2014 முதல் 2018 ஆம் வருடம் வரை சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலில் இவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த சீரியலில் நிரோஷா, நளினி, எம்எஸ் பாஸ்கர், மதுமிதா என பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.