Actor Vadivelu Photos

காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Actor Vadivelu Photos : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் காமெடி மற்றும் பின்னணி பாடகரும் ஆவார். என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி கொடி கட்டு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, மாயி, சுந்தரா டிராவல்ஸ், கோவில், கம்பீரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேலு.

இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு, மனோபாலா இணைந்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.