actor thavasi
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த பிரபல நடிகர் தவசி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

Actor thavasi met with an accident – சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்து ‘கருப்பன்.. குசும்புக்காரன்.. வேட்டி சட்டை கேக்குறான்’ என வசனம் பேசி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.

ரஜினி முருகன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின்  பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தளபதி, அரசியலில் இந்த கட்சிக்கு ஆதரவா?

நேற்று இவரும் பிரபல சினிமா புகைப்பட கலைஞர் ஸ்டில் ரவியும் ஒரு தொலைக்காட்சி படப்பிடிப்பை முடித்து விட்டு காரில் திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஏற்பட்ட கார் விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இருவரும் உத்தமபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஸ்டில்ஸ் சிவா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நடிகர் தவசி காயங்ளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.