Actor Suriya‘s First Salary

YouTube video

Bigg Boss Tamil 5 Contestants List : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

ஜூன் மாதம் முதல் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தர்ஷா குப்தா, பவித்ரா, அஸ்வின், சிவாங்கி, பாலா, புகழ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்க ஸ்ரீ ரெட்டி, ராய் லட்சுமி, பூனம் பாஜ்வா, கிரண் ரத்தோட் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மொத்த போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், ராதாரவி, ஆகியோரிடமும் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.