Actor Suriya Records in Twitter 2020

சூர்யாவை பற்றியும் சூரரைப் போற்று படம் பற்றிய தகவல்களும் ட்விட்டரில் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Actor Suriya Records in Twitter 2020 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அத்தனை தென்னிந்திய மொழிகளிலும் கொண்டாடப்படும் படமாக சூரரைப்போற்று திரைப்படம் அமைந்தது.

தற்போது இந்த படமும் சூர்யா குறித்த தகவல்களும் ட்விட்டரில் இந்த வருடத்தில் என்னென்ன சாதனைகளை எல்லாம் படைத்து முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

  1. செகண்ட் லுக் போஸ்டருக்கு அதிக ட்வீட்டுகளை பெற்ற போஸ்டராக சூரரைப் போற்று அமைந்துள்ளது.
  2. கோலிவுட்டில் பர்த்டே கவுண்ட் டவுன் அதிகம் சூர்யாவுக்கு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  3. முதல்முறையாக 125-க்கும் அதிகமான பிரபலங்கள் இணைந்து சூர்யாவின் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டுளளனர்.
  4. இந்திய அளவில் அதிக அளவில் காமன் டிபி பதிவுகளை பெற்ற நடிகராக சூர்யா இடம்பிடித்துள்ளார்.
  5. இந்திய அளவில் கிட்டத்தட்ட 32 மணி நேரம் சூர்யா குறித்த இரண்டு டேக்குகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.
  6. கோலிவுட்டில் மூவி அன்வெசரி டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டது சூர்யாவின் படத்திற்கு தான்.
  7. கோலிவுட்டில் அட்வான்ஸ் அன்வெசரி டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டதும் சூர்யாவின் படத்திற்கு தான்.
  8. தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் கொண்டாடப்பட்ட திரைப்படமாகவும் அமைந்திருப்பது சூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.