Actor Suriya Health Details
Actor Suriya Health Details

ஊரடங்கு உத்தரவால் ஷூட்டிங்கில் வெளியே செல்வதில்லை இப்படியான நிலையில் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Actor Suriya Health Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதெல்லாம் முட்டாள் தனமா இல்ல.. மறைமுகமாக விமர்சித்த யுவன் சங்கர் ராஜா – வைரலாகும் ஆதாரம்

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் சிறு விபத்தில் காயம் ஏற்பட்டதாக தகவல் வைரலானது.

ஆனால் அது எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் சூர்யாவிற்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விரைவில் பூரண குணமடைந்து விடுவார் எனவும் கூறப்பட்டது.

சிம்பு நடிப்பில் வெளியாகி பெரும் தோல்வியைத் தழுவிய படங்கள் என்னென்ன தெரியுமா? – இதோ முழு விவரம்

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து இன்னும் சில விவரங்கள் கிடைத்துள்ளன.

அதாவது வீட்டிலேயே வொர்க் அவுட் செய்யும் போது ஏற்பட்ட விபத்து தான் எனவும் கையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலறிந்த சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.