நடிகர் சூரி பிக் பாஸ் முகேன் நடித்து வரும் வேலன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டு பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Soori Fun in Velan Shooting Spot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ்.

இவர் தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கவின் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் முகேன் ராவ் உடன் பிரபு, மீனாட்சி, சூரி ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகேன் ராவ் பாட்டு ஒன்றை பாட அதற்கு சூரி தான் பாடுவது போல டப் செய்துள்ளார். முகேன் ராவ் பாடுவதை நிறுத்தியதும் சூரி நானே படிக்கிறேன் என கூறி தென்றல் என்பதற்கு பதிலாக சென்ட்ரல் எனப் பாடுவார். அதன்பிறகு தயாரிப்பாளர் கலைமகன் அது சென்ட்ரல் இல்ல தென்றல் என கலாய்க்கிறார். இந்த கலகலப்பான வீடியோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முழுமையாக முடிவடைந்து ஏற்பதாகவும் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.