8 வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் கொடுத்த கிப்ட் ஒன்றை புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளார் சஞ்சீவ்.
Actor Sajeev With Vijay : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக வலம் வருபவர் சஞ்சீவ். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சஞ்சீவ் அளித்து வரும் பேட்டிகளில் தொடர்ந்து தளபதி விஜய் குறித்து பேசியிருக்கிறார். அதே போல் அடிக்கடி அவர் தளபதி விஜய் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் இவரும் விஜயும் ஒரே மாதிரியான சட்டை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வேலாயுதம் படத்தின் போது விஜய் வணங்கி கொடுத்த கிப்ட் என தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை பெற்று வருகிறது.