TopStar Prashant Latest Photos

எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார் டாப் ஸ்டார் பிரசாந்த். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actor Prashant Latest Photos : தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தியாகராஜன். இவருடைய மகன் தான் பிரசாந்த். தமிழ் சினிமாவில் 1990 ஆம் வருடம் வெளியான வைகாசி பிறந்தாச்சு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பெருந்தச்சன் என்ற மலையாள படத்தில் நடித்தார். பிறகு மீண்டும் வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் பிரேம சிகரம், லட்டி லிட்டர் பல தெலுங்கு படங்களிலும் சில இந்தி படங்களில் நடித்துள்ளார்.

அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுக்கும் ஹீரோவாக இருந்து வந்த பிரசாந்த் தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக திரையுலகை விட்டு விலகினார். தற்போது மீண்டும் புத்தம் புது அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதுவரை குண்டாக இருந்து வந்த பிரசாந்த் தன்னுடைய திரையுலக ரீ என்ட்ரிக்காக உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். தங்களுடைய ஃபேவரிட் நடிகர் மீண்டும் பழையபடி திரும்பி வந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கமெண்டுகளை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.