Actor Prabhas's New Car

ரூபாய் 6.5 கோடி மதிப்புள்ள லம்போகினி என்ற ஆடம்பர காரை வாங்கியுள்ளார் நடிகர் பிரபாஸ்.

Actor Prabhas’s New Car : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தினை தொடர்ந்து சாஹோ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் ஓவர் பில்டப்பால் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், அதிருபுஷ், சலார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் ரூபாய் 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இவர் பேட்டி ஒன்றில் லம்போர்கினி காரை என் வாழ்நாளில் ஒரு முறையாவது வாங்கி விட வேண்டும் என்பது தான் என் ஆசை என கூறியிருந்தார். அவர் கூறியபடியே ரூபாய் 6.5 கோடி மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கியுள்ளார் பிரபாஸ். இது குறித்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதே போல் ஜூனியர் NTR அவர்களும் ரூபாய் 5 கோடியில் ஒரு காரை புக் செய்து வாங்கியுள்ளார்.