parthiban
சாலையில் பேனர் விழுந்து சமீபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Actor parthiban video about subashree death – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில் பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

விஜய் கூட சேர்ந்து நடிக்கணும்னு எனக்கும் ரொம்ப நாள் ஆசை – பார்த்திபன் ஓபன் டாக்.!

சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், சாலையில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசியல் கட்சிகள் வைக்கும் பேனருக்கு எதிராக போராட்டிய டிராபிக் ராமசாமி பாராட்டியும், சுபஸ்ரீயின் மரணம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

Oththa Seruppu - Official Sneak Peek | R.Parthiban | Santhosh Narayanan | Sathya C