Actor Nakul Baby Photos

கார்த்திகை தீபத் திருவிழாவில் முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் நகுல்.

Actor Nakul Baby Photos : தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நகுல். இவர் தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ஹீரோவாகவும் பின்னணி பாடகராகவும் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

இவர் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இதுவரை தன் மகளின் முகத்தை சமூகவலைதளங்களில் காட்டாமல் இருந்து வந்த நகுல் முதல் முறையாக கார்த்திகை தீபமான நேற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாப்பா மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.