Actor Krishna With First Wife

நடிகர் கிருஷ்ணா விவாகரத்து செய்த அவருடைய முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Krishna With First Wife : தமிழ் சினிமாவில் கழுகு திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் கிருஷ்ணா. இந்தத் திரைப்படத்தை சக்தி சிவா என்பவர் இயக்கியிருந்தார். நாயகியாக பிந்து மாதவி நடித்திருந்தார். முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கிருஷ்ணா நடிகை சுனைனா உடன் காதலில் இருந்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் கிருஷ்ணாவின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் திருமணக் கோல புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.