இரண்டாவது முறையாக வெற்றி பட இயக்குனரோடு நடிகர் கார்த்தி கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Karthi Upcoming Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சூர்யாவின் தம்பியும் சிவகுமாரின் மகனுமான இவர் தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகின.

அதாவது நடிகர் கார்த்தி நடித்த கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொம்பன் படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.