Actor Karthi Recent Photos

தலையெல்லாம் நரைத்து வயதான தோற்றத்தில் நடிகர் கார்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Karthi Recent Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. சிவகுமாரின் இளைய மகன் மற்றும் சூர்யாவின் தம்பியான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

43 வயதாகும் கார்த்திக் நரைத்த முடியுடன் இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆனால் இது ஏதாவது ஒரு படத்திற்கான கெட்டப் ஆக இருக்கும் அது என்ன திரைப்படம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இது பொன்னியின் செல்வன் படத்தில் கெட்டப் ஆக இருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.