Actor Karthi

நவரச நாயகன் கார்த்தியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Actor Karthi Health Issue : தமிழ் சினிமாவில் 1980களில் ஹீரோவாக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்தி. இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் கௌதம் கார்த்திக் ஹீரோவாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 5ஆம் தேதி மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கார்த்தி ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நவரச நாயகன் கார்த்திக் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நாள் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்து கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவரது உடல்நிலை லேசான முன்னேற்றம் கண்ட நிலையில் தற்போது மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலைக்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் கார்த்தி வெகு விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.