Actor Karthi Blessed With Boy Family

நடிகர் கார்த்தி தன் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவானது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Actor Karthi Blessed With Boy Baby : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியும் ஆன இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக சுல்தான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் கார்த்திக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.

தற்போது நடிகர் கார்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவியின் சிகிச்சைக்கு உதவிய மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கார்த்திக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.