நவரச நாயகன் கார்த்திக் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Karthi Admitted in Hospital : தமிழ் சினிமாவில் 1990களில் பிரபல நடிகராகவும் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் கார்த்தி. நவரச நாயகன் என பெயர் எடுத்த இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். கார்த்தியின் அவருடைய மகனும் சேர்ந்து சந்திரமவுலி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இவர் மனித உரிமைகள் காக்கும் கட்சி என இது கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது நவரச நாயகன் கார்த்திக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருக்குமா என மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.