Actor Jai in Villian Role

பிரபல தமிழ் நடிகருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் நடிகர் ஜெய்.

Actor Jai in Villian Role : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த ஜெய் தல அஜித்தை போலவே ஆக வேண்டுமென அவரைப்போலவே ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன், இதை செய்ய மாட்டேன், அதைச் செய்ய மாட்டேன் என அடம்பிடித்து தன்னுடைய மார்க்கெட்டை அவரே குறைத்து கொண்டார்.

இந்தநிலையில் தற்போது இவர் நடிகர் சுந்தர் சி-க்கு வில்லனாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்த ஜெய், தற்போது வில்லனாக நடிக்க கூட ஓகே எனும் அளவிற்கு இறங்கிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.