Actor Arun Alexander Passes Away

மாநகரம், கைதி, பிகில் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

Actor Arun Alexander Passes Away : தமிழ் சினிமாவில் நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் வலம் வருபவர் அருண் அலெக்சாண்டர். பல படங்களில் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

மேலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் கைதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் தளபதி விஜயுடன் பிகில் மற்றும் நெல்சன் திலீப்குமார இயக்கத்தில் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதாகும் இவர் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அருண் அலெக்சாண்டர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.