Actor Aari in Vijay TV Serial

விஜய் டிவியின் பிரபல சீரியலில் நடிகர் ஆரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Aari in Vijay TV Serial : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆரி. பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் மெகா சங்கமம் தற்போது நடைபெற்று வருகிறது. இதை 2 சீரியல் குடும்பமும் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு இருப்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் நடுவராக நடிகர் ஆரி பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.