Actor Aarav Father Passed away

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Actor Aarav Father Passed away : மாடலிங் துறையை சார்ந்த நடிகரான ஆரவ் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் நாயகனாக படங்களில் நடித்து இருக்கிறார். இதுவரை இவரது நடிப்பில் ராஜபீமா மற்றும் மார்கெட் ராஜா MBBS என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு இளம் நடிகையுடன் சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் ஆரவ்வின் தந்தை உடல்நல குறைபாடு மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவருடைய உடல் அவரின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரவ்வின் தந்தை மரணத்திற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.