தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் நம்ப முதல்வர் பழனிச்சாமி - புகழ்ந்து தள்ளிய பொள்ளாச்சி ஜெயராமன்.!!

Abraham Lingan Edappadi Palanisamy : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போது ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களிலும் தேவையில்லாமல் மற்ற கட்சிகளை குற்றம் குறைகள் உரங்கள் இதுவரை அதிமுக செய்த மகத்தான திட்டங்கள் குறித்து பேசி முதல்வர் ஓட்டு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள வானகரம் பகுதியில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமி அவர்களின் சிறப்பான திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவர்களைத் தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தமிழகத்தின் ஆபிரகாம்லிங்கன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புகழாரம் சூட்டினார். மேலும் அம்மாவால் இரண்டு முறை நேரடியாக முதல்வராக்கப்பட்டவர் ஓ பன்னீர்செல்வம் என கூறினார் .

இவரைத் தொடர்ந்து பேசிய வளர்மதி முதல்வர் பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் ராமன் லட்சுமணனை போலவும் மருது சகோதரர்களை போலவும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.