தளபதி 65 படத்தில் டிக் டாக் பிரபலம் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Abarna Doss in Thalapathy 65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் இன்னொரு நாயகியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார். யார் இவர் தெரியுமா?? கேரளாவை சேர்ந்த இவர் இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பிரபலமானார். அதன்பின்னர் மலையாள இயக்குனர் தன்னுடைய படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

பின்னர் மனோகரம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் தளபதி 65 படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.