Abarna Balamurali About Suriya

நடிகர் சூர்யா உடன் முதலில் நடிக்க பயந்ததாக பேசியுள்ளார் அபர்ணா பாலமுரளி.

Abarna Balamurali About Suriya : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் சூர்யா ரசிகர்கள் அப்செட்டாகினர். ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு அபர்ணாவை தவிர சிறப்பாக யாராலும் நடிக்க முடியாது என்பதை அவர் தன்னுடைய நடிப்பால் நிரூபித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சூர்யா சாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்ததும் நான் ஆகாயத்தில் பறந்தேன். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன். சூர்யா சார் சீனியர் நடிகர் அவர் என்னோடு நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம்.

என்னுடைய பெயர் கூட வெளியே தெரியாது. முதலில் அவருடன் நடிக்க வேண்டும் என்றதும் நான் பயந்தேன் பிறகு பயிற்சியில் தான் இருவரும் கதையை சேர்ந்து ஒன்றாக படித்தோம். எனக்கு மிகவும் உறுதுணையாக ஒத்துழைப்பாக இருந்தார்.

அவருடைய அமைதி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். நடிகர் என்றால் நடித்துக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள் ஆனால் சூர்யா சார் அப்படி இல்லை அனைத்து நடிகர்களையும நடிப்பையும் உன்னிப்பாக கவனிப்பார் என கூறியுள்ளார்.