Aari Video About BB4

இது எனக்கு கிடைத்த வெற்றியல்ல உங்களுக்கு கிடைத்த வெற்றி என ஆரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Aari Video About BB4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றியாளராக டைட்டிலை வென்றுள்ளார் ஆரி அர்ஜுனன்.

பிக் பாஸ் டைட்டில் வென்ற கையோடு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எல்லா புகழும் உங்களுக்கே என பதிவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி, உங்களுக்கு கிடைத்த வெற்றி. எல்லா புகழும் உங்களுக்கே என பேசியுள்ளார்.

ஆரி அர்ஜுனனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.