Aari Tweet About Balaji Father Death

பாலாஜி முருகதாஸின் தந்தை இறந்ததற்கு ஆரி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Aari Tweet About Balaji Father Death : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாசும் வெற்றி பெற்றனர்.

பிக் பாஸ் வீட்டில் ஆரி மற்றும் பாலாஜி முருகதாசுக்கும் இடையே வாக்குவாதங்களும் சண்டைகளும் பெரிதளவில் காணப்பட்டாலும் இறுதியில் சமாதானம் ஆகி ஒன்றாக இருந்தனர்.

இப்படியான நிலையில் பாலாஜி முருகதாஸின் தந்தை திடீரென மரணம் அடைந்ததை கேட்ட ஆரி பாலாஜி முருகதாசுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்த கடினமான தருணத்தில் அவர்களுக்கு தைரியமும், மனவலிமையும் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.